பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், பல்வேறு சர்ச்சைகளை கடந்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் பிரபல மாடல் ஆரவ். தற்போது தமிழ் சினிமாவில், கதாநாயகனாகவும் வலம் வரும் இவரது தந்தை இன்று காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: வித்தியாசமாக காப்பாற்றப்படும் போட்டியாளர்கள்..! வெளியேற போவது யார்? பரபரப்பான புரோமோ!
 

சமீப காலமாக, உடல் நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த, ஆரவின் தந்தை திடீர் என இன்று காலை காலமாகியுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்பே வேலை காரணமாக மனைவி, பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்து செட்டில் ஆனவர்.

இதை தொடர்ந்து இவரது இறுதி சடங்குகள் இவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இந்த தகவல் ஆர்வின், ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் தொடர்ந்து தங்களது இரங்கலை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவா..? பிரமிக்க வைத்த வனிதாவின் மகள்..!

  
ஆரவ் மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ ’சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட புகழின் காரணமாக ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ ’ராஜபீமா’ ’மீண்டும் வா அருகில் வா’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.