பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 77ஆவது நாளை எட்டியுள்ளது. பிரச்சனைகள் பொறி பறக்கும் டாஸ்க் மூலம், நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரித்து வரும் பிக்பாஸ், அன்பு குரூபையே சுக்கு நூறாகவும் தகர்த்துள்ளார். இந்நிலையில் இன்று, வெளியாகியுள்ள புரோமோவில், இன்று காப்பாற்ற படும் நபரை வித்தியாசமாக அறிவிக்கிறார்.

நேற்றைய தினமே நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்த, ஆரி மற்றும் ரியோ ஆகியோர் காப்பாற்ற பட்டதாக அறிவித்தார் கமல், இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், நாமினேஷனில் நான்கு பேர் இருக்கிறீர்களா? அதில் ஒருவர் இங்கு வர வேண்டி இருக்கும் என தெரிவிக்கிறார்.

நான்கு முட்டைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. அதனை கமல் உடைக்க சொல்கிறார். சோம் காப்பாற்ற பட்டதாக பாலா தெரிவிக்கிறார். ஆரி, ஆஜித் சேவ் செய்யப்படுவார் என நினைப்பதாக கூறுகிறார்.  ஆஜித் மிகவும் படபடப்பாக இருப்பது அவரது செய்கையில் இருந்தே தெரிகிறது. பின்னர் கமல், மக்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என இன்று வெளியேற உள்ள நபரை அறிவிக்க தயாராவது தான் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

அந்த புரோமோ இதோ...