பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ரேகா வெளியேறியுள்ளார். எனவே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள போட்டி போட்டு திறமையை வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் எளிமையான டாஸ்க்கை வைத்த பிக்பாஸ் இன்று கொஞ்சம் கடுமையான டாஸ்க் தான் வைக்கிறார். அதாவது தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எட்டு பேர் ராஜா, ராணி, போன்ற கெட்டப்புகளும், மீதம் உள்ள எட்டு பேர், அரக்கர்கள் வேடமும் போட்டுள்ளனர்.

அரக்கர்கள் வேடம் போட்டுள்ளவர்கள் ராணி, ராணி, வேடம் போட்டவர்களை சிரிக்க வைக்க வந்தால், அவர்கள் சிலை போல் நிற்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். 

இதுகுறித்து முதல் புரோமோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுரேஷ், ஆரி, ஷிவானி, சுரேஷ், அர்ச்சனா, கேப்ரில்லா, ஆஜித் உள்ளிட்டோர் அரக்க, அரக்கிகளாகவும், சனம், சம்யுக்தா ,ரம்யா, சோம் சேகர், பாலாஜி, ரியோ, நிஷா உள்ளிட்டோர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில், எப்படியும் ரியோவை சிரிக்க வைத்து விட வேண்டும் என அவரை அரக்கர் கூட்டம் ரவுண்டு காட்டுகிறது. ஆனால் அவரோ தலையில் கை வைத்தபடி அமர்ந்து சிரிக்க மறுக்கிறார். இதை தொடர்ந்து பேசும் சுரேஷ் தன்னை பார்த்தாலே ரியோவிற்கு கோவம் வரும் என கூறுவதும், அரக்கர்கள் விதவிதமாக ரியோவை வெறுப்பேற்றும் காட்சிகளும் மூன்றாவது புரோமோவில் இடம் பெற்றுள்ளது.