பிக்பாஸ் "டைட்டல் வின்னர்" இவர் தானாம்...! கசிந்தது தகவல்..! 

தமிழில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 வில், யார் டைட்டில் வின்னர் பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி உள்ளது.

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கியிருக்கும் போட்டியாளர்களில் ஒவ்வொருவராக வெளியேறியபின் தற்போது நான்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பைனலுக்கு சென்று உள்ளனர். அதில் சாண்டி மாஸ்டர், லாஸ்லியா, ஷெரின் ,இவர்களில் யாருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு அனைவரும் ஓட்டு போட வேண்டும் என கோரிக்கை வைத்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்டிமென்ட்டாக சாண்டிக்கு தான் தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. காரணம்...ஷெரின் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்,லாஸ்லியா இலங்கையில் இருந்து வந்துள்ளார்,முகேன் மலேசியாவை சேர்ந்தவர்... எனவே தமிழ் நபராக உள்ளே இருப்பவர் சாண்டி மட்டுமே...

நாள் 1 முதல் தற்போது வரை பெருமளவில் எந்த ஒரு பெரும் விமர்சனத்திற்கும் ஆளாகவில்லை சாண்டி, எதார்த்தமாக பேசி அனைவரையும் அவ்வப்போது சிரிக்க வைத்தே எதார்த்தமாக நடந்துகொண்டார். மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவும் இருக்கிறது.

இதன் காரணமாக சாண்டி மாஸ்டர் தான், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் பெறுவார் என்ற குரல் இப்பொழுதே சமூகவலைத்தளத்தில் எழ தொடங்கி உள்ளது. இருந்தாலும் யார் டைட்டில் வின்னர் பெற போகிறார் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது அதுவரை பொறுத்திருங்கள்.