பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறிய 'பாட்டி சொல்லை தட்டாதே' டாஸ்கில், டாஸ்கை போட்டியாளர்கள் யாரும் சரியாக செய்யவில்லை என, அவர்களுக்கு ஜீரோ மதிப்பெண் வழங்கியதை முதல் புரோமோவில் பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இந்த டாஸ்கில் திருடர்களாக செயல்பட்ட ரம்யா, சோம், மற்றும் அவரது கூட்டாளி கேப்ரில்லா ஆகியோரை அறிமுகப்படுத்தி கொள்ளுமாறு கூறுகிறார்.

இதுகுறித்து பேசும் ரம்யா, இது தங்களுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்றும், முடிந்தவரை அர்ச்சனா பாட்டியிடம் உள்ள அந்த பத்திரத்தை சீக்கிரமாக திருட வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார். 

இதை கேட்ட ரியோ, சோம் சேகரை துரத்தி துரத்தி அடிக்கும் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த டாஸ்கில் ஜீரோ மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தாலும், போட்டியாளர்கள் அதனை கலகலப்பாகவே எடுத்து கொண்டது இவர்களது முகத்தை பார்த்தல் தெரிகிறது. மேலும் எப்போது அந்த பத்திரம் திருடப்பட்டது என்பது குறித்த குறும்படத்தையும் அணைத்து போட்டியாளர்களுக்கு போட்டு காட்டியுள்ளார் பிக்பாஸ்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ இதோ...