பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் மாஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடம் பேசும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்கள் அனைவரும் வழக்கறிஞ்ர் மற்றும் நீதிபதியாக மாறி, பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்காக நீதி கேட்டனர். சிலர் பொது நல வழக்கு தொடர்ந்ததையும் பார்க்க முடிந்தது.

வழக்கு தொடர்ந்தவருக்கு ஆதரவாகவும், குற்றம் சுமாற்றப்பட்டவருக்கு ஆதரவாகவும் போட்டியாளர்கள் சில நிஜ வழக்கறிஞ்ர் போலவே வாதாடியது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றது. ஆனால் சில வழக்குகளில், நீதிபதி குற்றம் இல்லாத சிலருக்கு தண்டனை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. எனவே பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

ஊத்தி கொடுத்து... ராதாரவியை ஓரம்கட்டி ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகம்? விரக்தியில் முறிந்த நட்பு!

மேலும் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, கமல்ஹாசன் நேற்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என சந்தேகம் எழுந்த நிலையில்... சற்று முன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி புரோமோவில் கலந்து கொண்டு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!

இதில் நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது, சில மனிதர்களையும் கூட... இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாமல் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர் யார் என்பது நிஜமாகவே தெரியாதா? அல்ல விசாரிக்க விரும்பவில்லையா? இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே... இவர்களை என்ன செய்யலாம்? என கமல்ஹாசன் மார்க்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Scroll to load tweet…