பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நாடா... காடா... டாஸ்க் அரங்கேற உள்ளது குறித்த கலகலப்பான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களான, பாலா, ஆரி, ரம்யா, ரியோ, சோம், கேப்ரில்லா ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில், அனிதா சம்பத் அழுது கொண்டே வீட்டிற்குள் வரும் காட்சியும், அவரை சக போட்டியாளர்கள் தேற்றும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. மேலும் தற்போது அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா, ரேகா, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், சனம் ஷெட்டி என சுரேஷ் தாத்தாவை தவிர அனைவருமே வீட்டிற்குள் விருந்தினராக வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் உச்சகப்படுத்தும் விதத்தில், பிக்பாஸ் மீண்டும் நாடா - காடா டாஸ்க் மூலம் போட்டியாளர்களை கலகலப்பாக்கி உள்ளார். இதுகுறித்து நிஷா படித்து கூறுகிறார். அப்போது சிலையாக நிற்கும் நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த டாஸ்க் நடந்த போது பல பிரச்சனைகள் வந்து போட்டியாளரர்களை மன கஷ்டத்தில் ஆழ்த்திய போதிலும், இந்த முறை எந்த ஒரு கவலையும் இன்றி... போட்டியாளர்கள் புன்னகையோடு சிரித்து கொண்டே சந்தோஷமாக விளையாடுவது புரோமோவில் இருந்தே தெரிகிறது.