பிக்பாஸ் லாஸ்லியா, முதல் முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள, 'Friendship படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில்,  இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அர்ஜுனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை வைத்து பார்க்கையில், ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டராகவே நடிக்கிறார் என்பது தெரிகிறது.

ஏதோ ஒரு விஷயத்திற்காக போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுக்கு எதிராக செயல்படுகிறார் அர்ஜுன். லாஸ்லியா சிரிப்பது, அழுவது மட்டுமே காட்டப்படுகிறது. மொத்தத்தில் நடிப்பில் லாஸ்லியாவை தூக்கி சாப்பிட்டு விட்டார் ஹர்பஜன் சிங்.

இந்த படத்தை ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்குகின்றனர். ஜெ.பி.ஆர் & ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசர் இதோ...