பிக்பாஸ் பிரபலம் கவின், ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில்... குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, பவித்ரா லட்சுமி நடித்து வரும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'கனாக்காணும் காலங்கள்' சீரியலில் தன்னுடைய நடிப்பை துவங்கி, 'சரவணன் மீனாட்சி', 'பிக்பாஸ்' என பல்வேறு சவால்களை கடந்து வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் நடித்த 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தில் நடித்து முடித்தார் கவின். இதை தொடர்ந்து, தற்போது ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கவின், விஜய் டிவி -யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும்... 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பல்வேறு சமையல்கலை செய்து அசத்தி வரும், 'பவித்ரா லட்சுமி' கவினுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படப்பிடிப்பில் இவர்கள் நடிக்கும் போது, எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.