பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு, அல்லது மூன்று சண்டைகளாவது வந்து விடுகிறது. ஆனால் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் போட்டியாளர்களுக்குள் சண்டை வருவது போன்ற எந்த காட்சியும் இல்லை என தெரிகிறது. அதிலும் 3 ஆவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே எப்படி, தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி கொண்டிருக்கிறார்களோ, அதே போல் பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும் பல கலகலப்பான டாஸ்குகள் தீபாவளியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் இரண்டு புரோமோக்களையும், அடுத்த வார தலைவர் யார் என்பதை நாமினேட் செய்யப்படுவதையும், நாமினேட் செய்யப்பட்டவர்கள் போட்டியில் பாகேற்றத்தையும் பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் கலகலப்பாக கொண்டாடியை தீபாவளி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் வாசலில் கோலம், வாழ்த்து... புத்தாடை உடுத்தி அனைத்து போட்டியாளர்களும் பட்டாசு வெடித்து இன்றைய தினத்தை கலகலப்பாக மாற்றியுள்ளனர். மேலும் இவர்களுக்காக சிறப்பு டாஸ்குகளும் வைக்கப்படுவது 3 ஆவது புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த புரோமோ இதோ...