நீட் தேர்வு அச்சத்தால் நேற்று  முன்தினம் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு ட்விட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

நீட் தேர்வால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது. இன்று நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா நீட் தேர்வை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக ஒரே நாளில் 'நீட் தேர்வு' மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது, இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற 'நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். 
என வேதனையுடன் தெரிவித்தார்.

இவரின் இந்த காட்டமான, அறிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம், சூர்யாவின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர் மன்றத்தினர் செலவு செய்து பேனர் வைக்கிறார்கள். சில சமயங்களில் பேனர் கீழே விழுந்து ரசிகர்கள் இறக்கிறார்கள். அதனால் திரைப்படத்தை தடை செய்யலாமா?. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூர்யா போன்றவர்கள் தன்னபிக்கை கொண்ட வார்த்தைகளை தெரிவிக்க வேண்டும். தினமும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க செல்லும் மருத்துவர்கள் மேற்கொள்ளுவது ஒரு தேர்வு போன்றது தான் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கும் வழக்கம் போல் ஆதரவும், எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.  காயத்ரி ரகுராம் பதிவு இதோ...