பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், ஏவிக்ஷன் படலம் அரங்கேறியது. முதல் வாரத்தில் எந்த போட்டியாளரும் வெளியேறவில்லை என்றாலும், இரண்டாவது வாரத்தில் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். இதனை மையப்படுத்தி... மிகவும் சுவாரஸ்யம் இல்லாத வகையில் கதை கூறிய 8 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றனர்.

இந்த 8 நபர்களில், சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய கூடாது என்று பிக்பாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஏவிக்ஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள 7 போரையும் மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றாமல், அவர்களுக்கு பிக்பாஸ்,  வரலாற்றிலேயே இதுவரை கொடுக்கப்படாத ஒரு டாஸ்க் கொடுக்கிறார்.

அதாவது ஏவிக்ஷன் பிரீ பாஸ் என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தி, இது இந்த சீசன் முழுவதுமே செல்லுபடி ஆகும் என கூறுகிறார். இதற்க்கு நிபந்தனை ஒன்றும் விதிக்கப்படுகிறது. அதாவது மற்ற போட்டியாளர்களை சுயநலத்தோடு போட்டியாளர்கள் வெளியேற்ற வேண்டும் என்பது தான். 

இன்றைய புரோமோவை வைத்து பார்க்கையில் ஆஜித் வெளியேறுவது போல் தெரிகிறது. இறுதியில் பிக்பாஸ் ஆஜித் இது தான் உங்கள் முடிவா என கேட்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த ஒற்றை பாஸ்காக, சுயநலத்தோடு போட்டியாளர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...