பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளியின் சிறப்பு டாஸ்காக நேற்று முதல் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்கிற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பாட்டியாக நடித்து அசத்தி வருகிறார் அர்ச்சனா. இவரிடம் உள்ள சொத்து பாத்திரத்தை அபகரிக்க, வேண்டும் என சோம்-ரம்யாவுக்கு பிக்பாஸ் சீக்ரட் டாஸ்க் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

எந்த ஒரு டாஸ்க்கும் இல்லாமலேயே நெற்றில் இருந்து பாலாஜி அந்த பத்திரத்தை திருட பல பிளான் போட்டு வருகிறார்.  அந்த பிளானை கேபிரில்லா மூலம் தெரிந்து கொண்ட ரம்யா, ஆரி-சனம் சண்டையின்போது யாருக்கும் தெரியாமல் பாலாஜிக்கு முன்னரே பத்திரத்தை திருடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி அர்ச்சனா, குடும்பத்தினர் அனைவர் மீதும் சந்தேகப்பார்வையில் உள்ளார்.

இந்த நிலையில் இன்று ரம்யா திருடிய பத்திரத்தை பாலாஜி திருடி குப்பை தொட்டியில் மறைத்து வைக்கும்போது, அதனை ரம்யா பார்த்துவிட்டார். இதுகுறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா விசாரிக்க அதற்கு அவர் கேப்ரில்லாவிடம் ஆத்திரம் அடைகிறார். பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்தது யார்? என பாலாஜி கேட்க, பீரோவில் இருந்து எடுத்த சோம்-ரம்யா குரூப் எல்லாம் சொதப்பி விட்டதே என மனதிற்குள் சிரிக்கிறார்கள். அதே நேரத்தில் கேப்ரில்லா வாயை விட்டு சிக்குகிறார். 

இதுகுறித்த ப்ரோமோ இதோ...