பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான NSK ரம்யா தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

NSK ரம்யா, சூப்பர் சிங்கர் நடுவராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமானவர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியேறினார். உண்மையில் இவர் ஓவர் நல்லவராக இருந்ததால், மற்றவர்களுடன் சண்டைகளில் மல்லுக்கட்டி கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. எனவே  குறைந்த ஓட்டுகள் வாங்கி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் சில புகைப்படங்களை பார்த்து இவருடைய ரசிகர்கள்,   ரம்யாவின் உடல் எடை அதிகரித்து வருவதாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குரிய பதிலை விரைவில் கூறுவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த ரகசியத்தை முதல் முறையாக, தன்னுடைய குடும்பத்தில் இணைந்துள்ள மூன்றாவது நபரான அவருடைய குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனக்கு குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டு, இதன் காரணமாக தான் உடல் எடை அதிகரித்ததாகவும், விரைவில் கடின உடல் பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற ரம்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஒரு சில மாதங்களில், சீரியல் நடிகர் சத்யாவை காதலித்து இரண்டாவதாக கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு குட்டி பாப்பாவும் பிறந்துள்ளது. எனவே இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.