பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவே மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில், தீபாவளி கொண்டாட்டம் துவங்கியுள்ளது. போட்டியாளர்களை குஷி படுத்தும் விதமாக பல டாஸ்குகள் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே 'பாட்டி சொல்லை தட்டாதே' டாஸ்க் பல பிரச்சனைகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது மற்றொரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, செங்கல்லை வைத்து புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு பேராக தனி தனியே ஒவ்வொரு அணியாக பிரியவேண்டும். 

ஒருவர் செங்கல்லை நகர்த்திவைக்க மற்றொருவர் கால் தரையில் படாமல் செங்கல் மீதே காலை வைத்து நடந்து செல்ல வேண்டும். கால்களை கீழே வைத்து விட்டால் அந்த நபர் அவுட். இந்த விறுவிறுப்பான டாஸ்க் பற்றி அர்ச்சனா படிப்பதும், போட்டியாளர்கள் செங்கல் மீது நடப்பதும் தான் இன்றைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ..