நாடோடிகள்  2  வெற்றி பெற வேண்டும் ! திருப்பதியில்  மனமுருக வேண்டிக்கொண்ட  பிக் பாஸ்   பரணி ,,,

நாடோடிகள் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், பிக்பாஸ் பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள  படம் நாடோடிகள்- 2. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிக்கப்பட்டு தற்போது இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துள்ளது.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார்,பரணி  உள்ளிட்டோர் இணைந்து நடித்த நாடோடிகள்-1 படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் நாடோடிகள் -2 படம் வெளியாக உள்ளது. சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார்,பரணி, அஞ்சலி உள்ளிடோர்  நடிப்பில்  மீண்டும் உருவாகியுள்ள இந்த படம் இப்போதே மக்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இது ஒருபக்கம் இருக்க.... 

குறிப்பாக... இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் பரணி, நடிப்புக்கு இடைவெளி விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 (2017) இல் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஓர் சிறப்பு இடத்தையும் பிடித்திருந்தார். பின்னர் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஒரு வேண்டுதலை வைத்துள்ளார்.

அதாவது, "நாடோடிகல்-2 திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும்..அது ஒரு  வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாராம். அதன்படி சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்து அக்டோபர் 10 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளது என்பதால், வேண்டுதல் நிறைவேறியது என எண்ணிய பரணி, திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்து உள்ளார்.

இந்த தரிசனத்தின் போதும் மீண்டும் ஒரு வேண்டுதலை வைத்துள்ளாராம் நடிகர் பரணி. அதாவது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நாடோடிகள் 2 பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டாராம். பரணியின்  வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..