பிக்பாஸ் வீட்டில், முதல் டாஸ்க் வைக்கப்பட்ட போது... போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து கூற வேண்டும் என பிக்பாஸ் கூறினார். பலரது மனதை மிகவும் பாதித்தது என்றால் அது, வேல்முருகன் மற்றும் பாலாஜியின் கதை தான்.

இவர்கள் இருவருமே, ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர்கள். குறிப்பாக பாலாஜி தன்னுடைய அப்பா தினமும் குடித்து விட்டு தன்னை அடிப்பார் என்றும், அம்மாவும் ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாக மாறிவிட்டார். இருவருமே தன்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை. என மிகவும் ஆவேசமாக பேசினார்.

இவர் , இவ்வளவு வேதனை நிறைத்த பாதைகளை கடந்து, மிஸ்டர் இந்தியா பட்டத்தை பெற்றதற்கு,  உலக நாயகன் கமலஹாசன் உட்பட அனைவருமே பாலாஜியை பாராட்டினார்கள்.

இப்படியெல்லாம் பேசிய பாலாஜி, சமீபத்தில் பிக்பாஸ் யாரை மிகவும் மிஸ் செய்கிறீர்கள் என வைக்கப்பட்ட டாஸ்கில், தன்னுடைய அம்மா தன்னை ஆரத்தி எடுத்து வரவேற்றதாகவும், அவர் மிகவும் பாவம் என பேசியுள்ளார். எனவே இவர் பேசுவதில் எது உண்மை... என இது குறித்த வீடியோவை போட்டு வச்சி செய்து வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ...