பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பான விளையாட்டு, சண்டை சச்சரவுகள் என கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் பல போட்டியாளர்களை கடுப்பேற்றி வருகிறது. குறிப்பாக இதுவரை பலரை காண்டாக்கி வந்த சுரேஷையே குலுங்கி குலுங்கி அழ வைத்துள்ளது இந்த டாஸ்க்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒருவருக்கு அட்வைஸ் கொடுத்துட்டு, படாத பாடு பட்டு வரும் ஆரியை பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் அமைதியாகவும், மிகவும் மெச்சூரிட்டியாகவும் பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வருகிறார். அதனால் இந்த சீஸனின் வெற்றியாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் உள்ளது.

இவரை பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல் தான் ரசிகர்களையும், மக்களையும் இவரை மனதார பாராட்ட வைத்துள்ளது. அதாவது சமீபத்தில் தான், ஆரிக்கு காலின் முட்டியில் அடி பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம். 6 மாதமாக படுத்த படுக்கையில் இருந்த அவரால் 1 வருடமாக நடக்க கூட முடியவில்லையாம். பின்னர் தான் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுள்ளார்.

இந்த நிலையில் தான், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றிற்காக தன்னுடைய கால் வலியையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய சக பொறியாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என, சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அவரை தூக்கி வைத்து கொண்டு விளையாடியுள்ளார். இவரின் இந்த செயல் இவரின் உண்மையான முகத்தை காட்டும் விதமாகவே உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.