பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இன்றைய நிகழ்ச்சி. விதிமுறையை கையில் எடுத்து, ஓவர் ஆட்டம் போட்ட அர்ச்சனாவுக்கு செம்ம பதிலடி கொடுக்கும் விதமாகவே இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

ஆரியை பார்த்து, விதிமுறைகள் விஷயத்தில் அப்படி என்ன குழப்பம் என கமல் கேட்க, ஒவ்வொரு குரூப்பா ஃபாம் பண்ணிட்டாங்க என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவிக்கிறார். இடையில் முந்திரி கொட்டையை போல் முந்தி கொண்டு வந்து ரம்யா,  அதில் அவரும் இருந்தார் என கூறி, இதை தகவலுக்காக மட்டுமே தெரிவிப்பதாக சொல்கிறார்.

பின்னர் கமல் ரம்யாவை பார்த்து, இன்ஃபார்மென்ட் ரம்யா பாதிக்க பட்டவர்களுக்கு ஒரு கோவம் இருக்கத்தான் செய்யும் என கூற இவரது முகமே வாடி போகிறது. இவரை தொடர்ந்து, அர்ச்சனா ஆரியை கிண்டல் செய்வது போல் பேசி, எதற்கெடுத்தாலும் ஒரு குழப்பத்திலேயே இருந்ததாக சொல்கிறார்.

அர்ச்சனாவின் வாயை அடைப்பது போல், சட்டம் வெளியேவாக இருக்கதும், உள்ளேயாக இருக்கட்டும் தனி நபர் சவுகர்யத்திற்காக வளைக்க முடியாது. அப்படி வளைத்தால் நிமிர்த்து விடுவேன் என கெத்தாக பேசும் காட்சி தான் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புரோமோ இதோ...