பிக்பாஸ் வீட்டில் ஒரே நேரத்தில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை நடிகர் மகத்  கட்டிப்பிடித்து அங்கிருக்கும் மற்ற ஆண் போட்டியாளர்களின் வயிற்று எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.   பிக்பாஸ் 2 வீட்டில் பல பிரபலங்கள் இருந்தாலும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா உள்ளனர். இருவரும் உடை அணிவதில் தாராளம் காட்டுவதால் இரவு ஒன்பது மணி ஆகிவிட்டால் இளைஞர்கள் விஜய் டிவி முன்னால் அமர்ந்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு இளைஞர்களை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கவர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் யாஷிகா பின்னால் மகத் சுற்றிக் கொண்டிருந்தார்.  வேலைக்காரி டாஸ்கின் போது மகத் கேட்கும் போதெல்லாம் ஊட்டிவிடுவது, கால் அமுக்கி விடுவது என்று யாஷிகா கிட்டத்தட்ட மகத்தின் அடிமை போல் இருந்தார். ஏன் மகத்தின் உடைகளை கூட யாஷிகா துவைத்துக் கொடுத்தார். இதனால் யாஷிகா இருக்கும் இடத்தில் எல்லாம் மகத்தை பார்க்க முடிந்தது. இருவரும் காதலில் விழுந்துவிட்டார்கள் என்றெல்லாம் கூட பேச்சு இருந்தது.இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஐஸ்வர்யா-ஷாரிக் ஜோடியையும் சேர்த்து கிசுகிசுக்கள் வந்தன. எப்போதும் ஐஸ்வர்யா இருக்கும் இடத்தில் ஷாரிக் இருந்து வந்தார். ஆனால் ஐஸ்வர்யாவுக்கோ மகத் மீது ஒரு கண் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. இதனை தெரிந்தும் யாஷிகாவுக்காக ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளாமல் மகத் இருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா செய்த சில வேலைகளால் மகத் – யாஷிகா இடையே சண்டை மூண்டது. ஏன் மகத்தை காரணமாக வைத்து ஐஸ்வர்யாவும் – யாஷிகாவும் கூட சண்டை போட்டுக் கொண்டனர்.

 இதனால் கோபித்துக் கொண்டு யாஷிகா சென்றுவிட்டார். அவரை ஜனனி உள்ளிட்டோர் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மகத்தும் யாஷிகா – ஐஸ்வர்யா இடையே சமாதானம் செய்யும் வேலையில் இறங்கினார். ஆனால் இருவரும் சமாதானம் ஆகாமால் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக யாஷிகாவும் – மகத்தும் ஒன்றாக இருந்ததை பார்த்து பலரும் கண் வைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட யாஷிகா – ஐஸ்வர்யாவுடன் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து யாஷிகாவும் – ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். இது தான் சமயம் என்று காத்திருந்தவர் போல மகத் உடனடியாக கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருக்கும் மற்ற ஆண்கள் பொறாமைப்பட்டுக் கொண்டதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.