அனிதா மாற்றி மாற்றி பேசி ஜூலியாக மாறி வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்..இதற்கிடையே இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவலும் கசிந்துள்ளது..

விஜய் டிவியில் ரேட்டிங்கை எகிற வைத்த பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே சேரும்..பட்டி தொட்டியெல்லாம் இந்த நிகழ்ச்சி பிரபலம். 100 நாட்கள் பிரபலங்களின் முகத்திரை கிழிவதை கண்டு ரசிகர்கள் ரசித்து வந்தாலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வேற லெவல் வெற்றியடைவது உறுதியான ஒன்றாகி விடும்..

ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கலக்கி வரும் பிக்பாஸ் தமிழில் இதுவரை 5 சீசன்களை முடித்துள்ளது. இதற்கிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை முழுமையாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்ததை தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையுள் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.. சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்கினார்...பின்னர் விக்ரம் படப்பிடிப்புகளில் முறையாக கலந்து கொள்ள இயலவில்லை என கூறி இந்நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகுவதாக சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து..தற்போது சிம்பு தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்..கடந்த வாரம் தடபுடலாக களமிறங்கிய சிம்புவின் இந்த வார என்ட்ரி பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது..அவ்வளவு சிக்கல் இந்த வாரம்..

ஒருபுறம் ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சைகள்...அங்கு அபிராமி - பாலா என்னதான் செய்தார்கள் என அறிய மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்..அடுத்ததாக அனிதா..பின்னால் பாலாவை பொறாமை பிடித்தவன் என கூறிவிட்டு..நாட்டாமை டாஸ்கில் இல்லவே இல்லை என சாதிக்கிறார்.. இந்த பிரச்சனையை போக்க குறும்படம் போடுவாரா சிம்பு என்கிற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

 இந்நிலையில் இந்தவாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவலும் கசிந்துள்ளது...நாமினேஷன் செய்யப்பட்ட சினேகன், ஜூலி, அனிதா, அபிராமி, பாலாகி, ஸ்ருதி, ஆகியோர் உள்ளன்ர். இவர்களில் ஸ்ருதி மிகக்குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளதாக தகவல் சொல்கிறது..