எப்போதும் பிறர் விமர்சங்களை மட்டும் பெற்று வந்த ஜூலை தற்போது திடீரென பாலாஜி அவரின் பாஸிட்டிவ் குறித்து பேசுவதை கேட்டு மனமுருகி அழுகிறார்.
பிக்பாஸ் அல்டிமேட்:
பிரபல தொலைக்காட்சியான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட் கொடுத்தது. இதையடுத்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 14 போட்டியாளர்கள் முதலில் களமிறங்கினர். பின்னர் இதுவரை கலந்து கொள்ளாத சதீஷும் உள்நுழைந்தார்.
கமல் அடுத்து சிம்பு :
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்து விட்டது. இதில் கமல் தான் ஆரம்பத்தில் அல்டிமேட்டிற்கும் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் படப்பிடிப்பிற்காக விலகி கொண்ட கமலுக்கு பதிலாக சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு... ஒரு பெரிய மனுஷன இப்படியா நடத்துறது?...பிக்பாஸ் அல்டிமேட்டில் எகிறும் அட்டூழியங்கள்

வனிதா இடத்தை நிரப்பும் தாத்தா :
வனிதாவின் விலகளுக்கு பிறகு ஓரளவு வீட்டை விறுவிறுப்பாக வைத்திருப்பவர் சுரேஷ் தான். அங்கொன்றும் இன்கொன்றுமாய் பற்ற வைத்து அவ்வப்போது வெடிக்க வைப்பார். இதற்கிடையே நேற்று சுரேஷ் சக்ரவர்த்தியை கலங்கடித்த போட்டியார்கள் நேற்று அவரே தன வாயால் காலில் விழட்டுமா என கேட்கும் அளவிற்கு வெறுப்பேத்தி விட்டனர்.
பீப்பிள் திட்டிய நிரூப் :
கடந்த நாட்களில் நிரூப்மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இவரது பெண்கள் குறித்த விமர்சனம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வாறு இருக்க சமீபத்தில் ஜூலியை பீப்பிள் திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் நிரூப். இதற்காக ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
கண்ணீர் விட்ட ஜூலி :
பிக்பாஸுக்கு பிறகு ஜூலி அனைவரும் அறிந்த பிரபலமாக மாறியிருந்தாலும் மற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த மரியாதையை இவருக்கு கிடைக்கவில்லை. வெளியில் எப்போதும் ஜூலியை பலரும் கலாய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு இருக்க இன்றைய எபிசோடில் பாலாஜி முருகதாஸ் கவலையுடன் அமர்ந்திருக்கும் ஜூலிக்கு தேற்றுதல் கூறுகிறார். அப்போது அவர் கூறும் வார்த்தைகள் ஜூலியை மெய் மறந்து கண்ணீர் வடிக்க வைக்கிறது.
