bigg boss tamil 5 eviction : சென்ற வாரம் போலவே இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் கடந்த வாரம் நடந்த எவிக்‌ஷனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். அதன்படி குறைந்த வாக்குகளை பெற்ற வருண் அக்‌ஷரா ஆகியோர் எவிக்ட் ஆகினர்.

இந்நிலையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என சொல்லப்படுகிறது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடைசி வரை போராடிய மூன்று பேரில் அமீர் டிக்கெட்டை வென்று விட்டார் என தகவல்கள் கசிந்த நிலையில், கடைசி வரை அதற்காக போராடிய சிபி மற்றும் சஞ்சீவ் தான் இந்த வாரம் அதிரடியாக வெளியேற போகின்றனர் என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அன் அஃபிஷியல் போலிங்கில் சிபி, சஞ்சீவ் மற்றும் அமீர் தான் கடைசி மூன்று இடங்களில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வாரம் சிபி மற்றும் சஞ்சீவ் தான் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.