bigg boss snegan

தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின் பல பேர் காரணமாக இருந்தாலும் ஓவியாவின் பங்கு தான் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒவியாவிற்காகவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர் , இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதனை சரி செய்யும் பொருட்டு, மீண்டும் ஓவியாவை நிகழ்சிக்கு கொண்டுவர கமல் முயற்சித்து வருகிறார். அதே வேளையில் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் ஏற்றுவதற்காக, சில டாஸ்க் கொடுப்பது வழக்கம்.அதன்படி, பிந்து மாதவியை ஏமாற்ற போட்டியாளர்கள் முடிவு செய்தனர்.இதனை தொடர்ந்து சினேகன் பேய் பிடித்தது போல் இரவு நேரத்தில் அலறினார்.

மற்றவர்கள் தான் உண்மையில் பயப்படுவது போல் நடித்தனர்.ஆனால் ஒன்றும் தெரியாத பிந்து மாதவியிடம் பயமும் இல்லை. எதிர்பார்த்த அளவிற்கு ரியாக்ஷனும் இல்லை.

ஆனால் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்களோ உண்மையில் ப்ரோமோவை பார்த்து என்ன நடந்ததோ என பயந்துவிட்டனர்