70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சனம், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, அத்துடன் நேற்று வெளியேறிய ஜித்தன் ரமேஷையும் சேர்த்து 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கேப்டனாக ஜித்தன் ரமேஷ் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதை சுட்டிக்காட்டிய கமல், ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவர் சரியாக செயல்படவில்லை எனக்கூறினார். அதனால் தான் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

 

இதையும் படிங்க: நடிகை மீனா பொண்ணு நைனிகாவா இது?... ‘தெறி’ பேபி இப்ப நெடு நெடுன்னு வளர்ந்துட்டாங்களே...!

அதுமட்டுமின்றி நேற்று டபுள் எவிக்‌ஷன் இருப்பதாகவும் ஹவுஸ் மேட்ஸ்களிடம் கமல் தெரிவித்திருந்தார். நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில் அடுத்த நபர் யார் என்ற பரபரப்பு உச்சத்தை நொறுங்கியுள்ளது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் அர்ச்சனாவை ஆண்டவர் சரியாக வறுத்தெடுப்பது இடம் பெற்றுள்ளது. 

 

இதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!

அர்ச்சனா மைக்கை அடிக்கடி கழட்டி வைப்பது குறித்து கமல் பேச, உடனே எவ்வித தாமதமும் இன்றி அர்ச்சனா எப்போ சார்? என குரலை பலமாக உயர்த்துகிறார். ஆஹா... சோம் சேகர் கிட்ட, அப்புறம் ஷிவானி கிட்ட ஒரு விஷயத்தை சொல்லும் போது அதை கழட்டி வச்சிட்டு பேசுறீங்க. மைக்கை கழட்டி வைக்கிறது விதிமீறல் தான் இதற்கு முன்னாடி அப்படி செஞ்சவங்கள வெளிய கூட அனுப்பியிருக்கோம் என எச்சரிக்கை விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த புரோமோ வீடியோ...