பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் இன்று கோலாகலமாக துவங்கி உள்ளது, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இரண்டு பிக் பாஸ் வீடுகளில் போட்டியாளர்களாக களம் இறங்கும் 18 பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் 17 வது போட்டியாளராக மாடல் அழகி அனன்யா ராவ் களமிறங்க, 18 வது போட்டியாளராக விஜய் என்பவர் களமிறங்கி உள்ளார். இதற்கு இடையில் 16 வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் பிரபல எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லதுரை.

யார் இந்த பாவா செல்லதுரை?

சென்னையை அடுத்த திருவண்ணாமலையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாவா செல்லதுரை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் ப்ரொபசர் சந்திரசேகரராக நடித்திருந்தார் பாவா செல்லதுரை. 

திரும்புற பக்கமெல்லாம் இவர் சீரியல் தான்.. இப்போ பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டார் - யார் இந்த விஷ்ணு விஜய்?

அதன் பிறகு ஜோக்கர், விஜய் சேதுபதியின் சீதக்காதி, பேரன்பு, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த பாவா செல்லதுரை, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகராக மட்டுமல்லாமல், "எல்லா நாளும் கார்த்திகை", "டோமினிக்", "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை", போன்ற ஏழுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். திருவண்ணாமலை பகுதியில் மக்களுக்கு இடையூறாக நடக்கும் பல சமூக அநீதிகளை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலராகவும் பாபா செல்லதுரை திகழ்கிறார். 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கையில் ஒரு புத்தகத்தோடு உள்ளே நுழைந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த காலத்து கிளாமர் குயின் வந்தாச்சு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த CWC போட்டியாளர் - யார் இந்த விசித்திரா?