மேடை நாடகம் முதல் வெள்ளித்திரை வரை.. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போல்டான நடிகை - யார் இந்த மாயா எஸ் கிருஷ்ணன்?
மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெறும் பிரிவில் அவர்களை மகிழ்விக்க வரும் "Hospital Clown"-னாக வலம் வந்து, இன்று மாபெரும் நடிகையாக உருவெடுத்துள்ள ஒருவர், தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் பல நடிகர் நடிகைகள் தொடர்ச்சியாக போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் விக்ரம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை மாயா எஸ் கிருஷ்ணன், தற்பொழுது ஒரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கியுள்ளார்.
யார் இந்த மாயா எஸ் கிருஷ்ணன்?
மருத்துவமனைகளில் குழந்தைகள் பிரிவில் அவர்களை மகிழ்விக்க வரும் "Hospital Clown"னாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, ஒரு சிறந்த மேடை கலைஞராகவும், வெள்ளித்திரை நடிகையாகவும் வலம்வருபவர் தான் மாயா எஸ் கிருஷ்ணன். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பதாகவே பல மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.
2015 ஆம் ஆண்டு வெளியான "வானவில் வாழ்க்கை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் இவர் ஏற்று நடித்திருந்தார்.
அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தார். தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
- BB Tamil
- BB Tamil 7
- Bigg Boss
- Bigg Boss Tamil
- Bigg Boss Tamil 7
- Bigg Boss Tamil 7 Season
- Bigg Boss Tamil 7 Contestant list
- Bigg Boss Tamil 7 House
- Bigg Boss Tamil 7 Kamal Hassan
- Bigg Boss Tamil 7 season
- Bigg Boss Tamil Season 7 Live
- Bigg Boss Tamil Season 7 Starting Time
- Kamal Haasan
- Kamal Haasan Bigg Boss
- Season 7 Launch
- Tamil Season 7 Contestants
- Maya S Krishnan