பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை பூர்ணிமா.. உடனே சிம்பு செய்த பேருதவி - வெளியான அசத்தல் அப்டேட் இதோ!
Poorima Ravi New Movie : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற Money Taskல் 16 லட்சம் ரூபாய் தொகையோடு வெளியேறினார் பிரபல நடிகை பூர்ணிமா ரவி.
இதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இரு வீடுகளுடன் மிகவும் சுவாரசியமாக பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சீசன் 7 வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபல மூத்த தமிழ் நடிகை விசித்ரா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த மணி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து அவராகவே வெளியேறினார் நடிகை பூர்ணிமா ரவி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேற்று அவர் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக பிரபல YouTube சேனல் ஒன்றில் பிரபல நடிகையாக அவர் திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள பூர்ணிமா ரவியும் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். வழக்கமாக போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவியும்.
ஆனால் பூர்ணிமாவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் ஹீரோயினாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு செவப்பி என பெயரிடப்பட்டு உள்ளது. எம்.எஸ்.ராஜா என்பவர் இயக்கும் இப்படத்தில் ரிஷிகாந்த் என்பவருக்கு ஜோடியாக பூர்ணிமா நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, பிரபல நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசர் வீடியோவை வெளியிட்டு பூர்ணமா உள்பட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.