பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களுடைய மகன் யுகேந்திரன் வாசுதேவன் ஒரு போட்டியாளராக களம் இறங்கியுள்ளது பலருடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது என்று கூறலாம்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக துவங்கி உள்ளது. இதுவரை 15 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரைத்துறை மூத்த பாடகரான மலேசியா வாசுதேவன் அவர்களுடைய மகன் யுகேந்திரன் வாசுதேவன் ஒரு போட்டியாளராக தற்பொழுது களமிறங்கியுள்ளார்.

லவ் டுடே படத்தில் கலக்கிய டக்கர் நடிகை.. இப்போ பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி - யார் இந்த அக்ஷயா உதயகுமார்?

யார் இந்த யுகேந்திரன் வாசுதேவன்?

தமிழ் சினிமா அரங்கில் யுகேந்திரன் வாசுதேவன் அவர்களுக்கு என்று ஒரு தனி அறிமுகம் தேவையில்லை. தல அஜித் அவர்களுடைய நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் யுகேந்திரன். 

தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், அது மட்டும் இல்லாமல் தமிழ் திரை உலகில் வெளியான சிறப்பான பல பாடல்களை பாடியவர் யுகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை மலேசியா வாசுதேவன் போலவே யுகேந்திரன் அவர்களும் ஒரு சிறந்த பாடகர். 

சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தற்பொழுது சிங்கப்பூர் குடிமகனாக அங்கு வசித்து வரும் யுகேந்திரன் வாசுதேவன் அவர்கள், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரும்புற பக்கமெல்லாம் இவர் சீரியல் தான்.. இப்போ பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டார் - யார் இந்த விஷ்ணு விஜய்?