பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்களின் பேவரைட்டாக வலம் வந்தவர் தர்ஷன். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு காதலி சனம் ஷெட்டியை கரம் பிடிக்க இருந்த தர்ஷன், நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமணத்தை பாதியில் தடுத்து நிறுத்தினர். இந்த பஞ்சாயத்து போலீஸ், நீதிமன்றம் வரை சென்று இன்று தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் தர்ஷன் தனக்கு செய்த துரோகத்தை பற்றிக்கூறுவாரா? என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சனம் ஷெட்டி, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை எனக்கூறினார். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியாளராக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் முன்பு கமல் ஹாசனை புகழ்ந்து தள்ளினார் சனம் ஷெட்டி, மக்களுக்காக போராடுகிறோம் என பலரும் ஏமாற்றும் நிலையில், நீங்கள் மட்டும் தான் உங்கல் பிரச்சனைக்காக நீங்களே போராடுங்கள் என மக்களுக்கு சரியான பாதை காட்டுகிறீர்கள் என வாழ்த்து கூறினார்.