பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிகம் பேரால் ஆர்வத்துடன் உற்று நோக்கப்பட்டவர் இடையழகி ரம்யா பாண்டியன். ரசிகர்கள் தங்களது விருப்பத்திற்கு இவங்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் என விதவிதமாக லிஸ்ட் போட்டு, சோசியல் மீடியாவில் உலவ விட்ட போதும் ரம்யா பாண்டியனின் பெயர் எப்போதுமே டாப்பில் தான் இருந்தது. 

வண்ண வண்ண சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறங்க வைத்தார் ரம்யா பாண்டியன். அவரது போட்டோ ஷுட்டுக்கள் மூலமாகவே பெரும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் பிக்பாஸ் குறித்த பேச்சு அடிப்பட்ட நாளில் இருந்தே ரம்யா பாண்டியனின் பெயர் அடிப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்போதே ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்கும் வேலையை செய்ய கிளம்பிவிட்டனர். 

கடைசி வரை வருவாரோ மாட்டாரோ என்று ரசிகர்களை ஒரு பீதியிலேயே வைத்திருந்தார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அறிந்த நெட்டிசன்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர்.