கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி செம்ம சுவாரஸ்யத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரமே சண்டை, சச்சரவு, அழுகை, வாக்குவாதம், கோபம் என போட்டியாளர்கள் தங்களது பல முகங்களை வெளிக்காட்டி வருகின்றனர். அனிதா சம்பத் - சுரேஷ் சக்கரவர்த்தியைத் தொடர்ந்து தற்போது ரேகா, சனம் ஷெட்டி இடையே மோதல் வெடித்துள்ளது. 

 இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹாசன் மீண்டும் பிக் பாஸ் ஷோவிற்கு வந்திருக்கிறார். அவர் மேடைக்கு வரும் வீடியோ தற்போது புதிய ப்ரோமோ வீடியோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது. பின்னணியில் யார் என்று தெரிகிறதா என்ற விஸ்வரூபம் பட பாடல் கமல் ஹாசன் நடந்து வரும் போது போடப்படுகிறது. பிக் பாஸ் மேடைக்கு வந்து 'வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4' என அவரது வழக்கமான பாணியில் கூறுகிறார். முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்துள்ளதால் கமல் ஹாசன் யாரை வெளுத்து வாங்க போகிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதனிடையே அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக கமலின் இரண்டாவது புரோமோ வீடியோவையும் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ‘உப்பு போட்டு சாப்பிடுறவன் உள்ள இருக்க மாட்டான் என சொல்லிவிட்டு உள்ளேயே இருக்கிறார் ஒருவர், தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவர் ஆகிவிட்டு இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருகிறார் மற்றொருவர். நாம் எப்படி? வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க போகிறோமா?” என கமல் கூறியுள்ளார். அப்போ கண்டிப்பா இந்த வாரம் உலக நாயகன்  மிகப்பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.