TTF டாஸ்கில் பவித்ராவை திட்டமிட்டு தோற்கடித்தாரா பிக் பாஸ்? வீடியோவால் வெடித்த சர்ச்சை
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் பவித்ராவை வேண்டுமென்றே அவுட் ஆக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதன்படி முத்துக்குமரன், மஞ்சரி, ஜாக்குலின், தீபக், பவித்ரா, ராணவ், செளந்தர்யா, ரயான், விஷால், அருண் பிரசாத் ஆகிய 10 பேருக்கு இடையே தான் டைட்டில் வின்னருக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றிபெறும் நபர் நேரடியாக பைனலுக்கு செல்ல முடியும் என்பதால், அதை வெல்ல போட்டியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அதில் மொத்தம் 10 டாஸ்குகள் நடத்தப்படும். அந்த டாஸ்கின் இறுதியில் யார் அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறாரோ அவருக்கு நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டிகளின் தற்போதைய நிலவரப்படி ரயான் தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விஷால் மற்றும் முத்துக்குமரன் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மலையாளியா இருந்தாலும் விஜய் சேதுபதி முன் திருக்குறள் கூறி அசத்திய அன்ஷிதா; வைரலாகும் வீடியோ!
இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மேஜை மீது ஏறி நின்று தங்கள் தலைக்கு மேல் இருக்கும் பல்பை கையால் எட்டிப் பிடித்தவாரு நிற்க வேண்டும். அவர்கள் எட்டிப்பிடித்தபடி நின்றால் மட்டுமே லைட் எறியும். ஒருவேளை கைய்யை மாற்றினாலோ, இல்லை அதில் இருந்து எடுத்தாலோ லைட் அமந்துவிடும், அந்த போட்டியாளரும் வெளியேற்றப்படுவர் என அறிவித்து பிக் பாஸ் ஒரு டாஸ்கை நடத்தினார்.
இந்த டாஸ்கில் விஷால் வெற்றிபெற்றார். இந்த டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் கையை எடுத்தபோது லைட் ஆஃப் ஆனதால் வெளியேறினர். ஆனால் பவித்ரா ஜனனி கையை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தபோதே லைட் ஆஃப் ஆனது. இதை நோட் பண்ணிய ரசிகர்கள் பிக் பாஸ் திட்டமிட்டு பவித்ராவை போட்டியை விட்டு வெளியேற்றிவிட்டதாக கொந்தளித்து வருகின்றனர். விஷாலை ஜெயிக்க வைக்கவே பிக் பாஸ் இதுபோன்ற செயலை செய்ததாகவும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் இங்க வேண்டாம்; ஜாக்குலினிடம் சுயரூபத்தை காட்டிய சவுந்தர்யா!