Pavani - Amir Love: பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் பாவனி, எனக்கு அமீரை பிடிக்கும் என்று அனைவரின் முன்னும் கூறியுள்ளார். இதனால், அமீர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பாவினி கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

முதல் கணவரை இழந்து தவித்து வந்த பாவனி ரெட்டி இரண்டாவது திருமணமும் தடைபட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பாவனி மற்றும் அமீர் நெருக்கமாக பழகியது ரசிகர்களை கடுப்பேற்றியது. பாவனிக்கும் அமீருக்கும் காதல் இருக்கிறதா? என பல்வேறு சர்ச்சையை கிளப்பியது. 

பிக் பாஸ் ஜோடிகள் 2:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக இணைந்து நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி 3 வரங்களை கடந்துள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

பிபி ஜோடிகள் புதிய புரமோ:



இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிபி ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாவனியிடம் அமீர் காதல் குறித்து சிலகேள்விகள் கேட்கப்படுகிறது. அதில் பாவனி வெக்கத்துடன் தைரியமாக எனக்கு அமீரை பிடிக்கும் என்று சொல்கிறார். ஆனால்... எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நெட்டிசன்கள் அமீர் பாவனி காதல் விவகாரம், உண்மையா.? என்றும் சிலர் வாழ்த்துக்கள் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

View post on Instagram

மேலும் படிக்க....Sonali Bendre Cancer: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் ஹீரோயின்...இப்போது அவரின் நிலை என்ன தெரியுமா..?