"யம்மா வனிதாகிட்ட வாயை கொடுக்க எனக்கு மூச்சில்ல" - புரோமோ வீடியோவில் மரண கலாய் கலாய்த்த சாண்டி... வனிதா ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் நுழையும் போதே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் வந்தவர் வனிதா. வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வதில் வல்லவரான வனிதாவை, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. படையப்பா நீலாம்பரி அளவிற்கு, 'வி ஆர் தா பாய்ஸ்' குரூப்பை தெறிச்சி ஓடவிட்டார். நீ வந்த மட்டும் போதும் என்பது போல், வனிதா வந்தாலே பிக்பாஸ் டீம் மீட்டிங் அதிரி புதிரியாக மாறும். இப்படிப்பட்ட வனிதாவை, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் சாண்டி மரண கலாய் கலாய்த்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை தீபாவளிக்கு எதிர்பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை மதியம் 3.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதில் வழக்கம் போல பிக்பாஸ் பங்கேற்பாளர்களை கலாய்ச்சி, சாண்டி மாஸ்டர் பாடும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில அவர் வனிதாவை பங்கமா கலாய்க்கிற வரிகளுக்கு அரங்கமே அதிர அளவுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இதையெல்லாம் பார்த்த வனிதா காண்டு ஆவாங்கன்னு பார்த்த, கூலா சிரிச்சே சமாளிச்சிட்டாங்க. 

அதில், “சொர்ணாக்காவே தோத்துட்டாங்க இவங்க பேச்சுல, எக்கா வனிதாக்கா...யம்மா வனிதாகிட்ட வாயை கொடுக்க எனக்கு மூச்சில்ல...நல்லா இருந்த குடும்பத்தையே பத்த வச்ச, கடைசியா போகும்போது வயிறு நிறையா சோற வெச்ச... டாஸ்குல தான் டாப்ல தான் வந்த தர்ஷனு...எல்லாரும் உசுப்பு ஏத்திவிட்டதால போயிட்ட புஸ்ஸுனு” பாடியிருக்காரு. பிக்பாஸ் ரசிகர்களின் கருத்தை வச்சி எழுதப்பட்டுள்ள சாண்டியின் கனா பாடல் சோசியல் மீடியாவில லைக்குகளை குவிச்சாலும் இன்னொரு பக்கம் ஒரு பெரிய பிரச்னை உருவாகியிருக்கு. அது என்னனா எங்க கவின் அண்ணா புரோமோவை சீக்கிரம் போடுங்க, இல்லைன்னா புரோமோ வீடியோவுக்கு லைக்கே வராதுன்னு அவரோட ரசிகர்கள் செல்லமா மிரட்டியிருக்காங்க.