பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. கவினுடன் ஏற்பட்ட காதலால் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானார். தற்போது சில படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு திடீரென மரணமடைந்தார். 

கனடாவில் பணிபுரிந்து வந்த மரியநேசன் அங்கேயே மரணமடைந்துள்ள நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக அவருடைய உடலை இலங்கை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மரியநேசன் மகள் லாஸ்லியா கவினை காதலிக்கும் விவகாரம் தெரிந்ததால் சற்றே கடினமாக நடந்து கொண்டார். இதனால் லாஸ்லியா அழுது, காலில் விழுந்து எல்லாம் மன்றாடிய பிறகே சற்றே கோபம் தணிந்து சமாதானம் ஆனார். கடந்த பிக்பாஸ் சீசனிலேயே இது மிகவும் எமொஷனலான சீனாக மாறியது. கவின் ரசிகர்கள் மரியநேசனை வில்லனாக பார்த்தாலும், லாஸ்லியா ரசிகர்கள் பாசமிகு தந்தையாக அவரை பாராட்டினர். 

இந்நிலையில் மரியநேசனின் திடீர் மரணம் லாஸ்லியா ரசிகர்களையும், அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது லாஸ்லியா இருக்கும் நிலை குறித்து நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்... உதவி கேட்டு மன்றாடும் மகன்...!

அதில், "அனைத்து லாஸ்லியா ரசிகர்களுக்கும், நான் அவரிடம் இப்பொழுதுதான் பேசினேன். அவர் சுக்குநூறாக உடைந்து உள்ளா.ர் அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் தைரியமாக இருப்பார் என்று நம்புகிறேன். அவர் விமானம் மூலம் ஸ்ரீலங்கா செல்ல, எம்பஸி மூலம் பேசி வருகிறார்கள். விஜய் டிவி டீம் அவருடன் இருக்கிறது. கொரோனா சூழ்நிலையில் அவரது உடல் உடனடியாக ஸ்ரீலங்கா கொண்டு வர முடியவில்லை" என பதிவிட்டுள்ளார். இதையடுத்து லாஸ்லியா ரசிகர்கள் பலரும், “அக்கா ப்ளீஸ் லாஸ்லியா கூடவே இருக்க... அவங்க ரொம்ப உடைச்சி போயிருப்பாங்க” என தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.