சுசீந்திரன் இயக்கத்தின் ஈஸ்வரன் படத்தை நடித்து முடித்த கையோடு மாநாடு படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

சென்னை மற்றும் ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில்,  கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இதையடுத்து நவம்பர் 9-ம் முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த படக்குழுவையும் பாதுகாக்க சித்த மருத்துவக்குழு என அசத்தலான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 

இதையும் படிங்க: களைகட்டும் பெரிய வீட்டு கல்யாணம்... அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் வாரிசு நடிகை வெளியிட்ட போட்டோ...!

அதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை  உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதில் செம்ம ஸ்லும் லுக்கில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிய சிம்புவை பார்த்து மன்மதனாகவே மாறிவிட்டதாக புகழ்ந்தனர். தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியல் இணைந்துள்ளார். சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.