Pradeep Antony : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகராக மாறினார் பிரதீப் ஆண்டனி.
இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பல திருப்பங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்து முடிந்துள்ளது. தொகுப்பாளினி அர்ச்சனா இந்த பிக் பாஸ் சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
அவரால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறி அவரை பிற போட்டியாளர்கள் கூற, உலக நாயகன் கமல் அவர்கள் ரெட் கார்டு கொடுத்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் பெரிய அளவில் எந்த விஷயங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
ஆனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு தொடர்ச்சியாக உத்வேகம் கொடுத்து வந்தனர், நடிகர் பிரதீப் ஆண்டனி ஏற்கனவே கவினின் டாடா மற்றும் வேறு சில திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பிக் பாஸை விட்டு வெளியேறுவதும் இயக்குனராக தனது பணியை துவங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்பொது புது படம் ஒன்றுக்கு கமிட்மெண்ட் கொடுத்தது குறித்து தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் அவர். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த வருடத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறேன். அதற்கு முன் பணமாக சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை பெற்றுள்ளேன் என்று மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் பிரதீப் ஆண்டனி.
லால் சலாம் படத்தின் வெற்றி - அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
