Lal Salaam : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைந்ததையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு நேற்று பிப்ரவரி 9ம் தேதி உலக அளவில் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் ரஜினிகாந்த்திற்கு பல்வேறு இடங்களில் பெரிய அளவு கட்டவுட் வைத்து ராட்சதமாலைகள் அணிவித்து ஆரத்தி எடுத்து ரசிகர்கள் லால் சலாம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

திரைப்படம் வெற்றியடைந்ததையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, நவகிரக சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பிகினி என்ன.. கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிப்பேன் - 50 வயதில் போல்டாக பதில் சொன்ன ஸ்வீதா மேனன்!