bigg boss contestant Sujaa Varunee Tweet Against Vijay TV
இந்தி தொலைக்காட்சியில் மெகா ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் மிக பிரமாண்டமாக நடத்தியது விஐய் டிவி. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
வெற்றிகரமாக 100 நாள் முடிந்த இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பல்வேறு ஆட்டம் பாட்டம் என ஒரே கச்சேரியாக களை கட்டியது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு வரான சுஜா வருணிக்கு ஒரு இன்னல் விஐய் டிவியால் இழைக்கப்பட்டது அதை சுஜா தற்போது தோல் உறித்தி காட்டிவிட்டார்.

என்னவென்றால் கமல் அனைத்து பிக் பாஸ் உறுப்பினர்களையும் கடைசி நாள் மேடையில் அழைத்து வரவேற்பு செய்து வைக்கும் பொழுது சுஜா அவர்களால் ஒழுங்காக நடக்க முடியவில்லை காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் அவரது கால் சற்று காயம் பட்டு இருந்தது அதனால் நடக்க முடியவில்லை.
ஆனால் மேடையில் நடனம் ஆடும் பொழுது ரொம்ப சூப்பராக ஆடினார் இதனை நோட் பண்ண பிக் பாஸ் ரசிகர்கள் சுஜாவை வருத்து எடுத்து விட்டனர்.
Thank you everyone🙏 #Biggbosspic.twitter.com/w66GxpFH9e
— Suja Varunee (@sujavarunee) October 1, 2017
இதன் பொருட்டு சுஜா தற்பொழுது விளக்கம் கொடுத்துள்ளார். இரண்டும் வெவ்வேறு நாளில் படமாக்கப்பட்டது. ஆனால் விஐய் டிவி தனது எடிட்டிங் திறமையால் அதை மொத்தமாக மாற்றிவிட்டது. என மறைமுகமாக விஐய் தொலைக்காட்சியை தாக்கும் விதத்தில் ஒரு டிவிட் போட்டுள்ளார்.
