நீங்கள் வெற்றியுடன் வெளியில் வாங்க என தாமரையை பார்த்து கூற பூரித்து போனா தாமரை ஸ்லோகாவின் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.
பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. முதலாவதாக சிபியின் தந்தை மற்றும் அவரது மனைவி ஸ்லோகா ஆகியோர் நேற்று வந்திருந்தனர். முதலில் தந்தையை மட்டும் பார்த்த சிபி மனைவியை தேடுகிறார்.
பின்னர் தேவதை ரேஞ்சுக்கு பில்டப்புடன் சிபியின் மனைவி ஸ்லோக வீட்டிற்குள் வருகிறார். வந்ததில் இருந்தது ஆங்கிலத்தில் சிபி மனைவி பேசியதால் தாமரை புரியாமல் விழித்தார். பின்னர் பிரியங்கா மொழி பெயர்ப்பு செய்ய தன்னை ஸ்லோகா பாராட்டி தள்ளியதை கேட்டு தாமரை பூரித்து போனார்.

பின்னர் சிபி சமையல் கட்டு பக்கமே வந்ததில்லை நீங்கள் அனைவரும் அவருக்கு நன்றாக கற்றுக்கொடுக்கிறீர்கள் என குறிப்பிட்டார். அதோடு சிபியிடம் சமையலை தாமரையிடமும், பொறுமையை ராஜுவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய ஸ்லோகா சிபியை அடுத்து பிரியங்காவை தான் பிடிக்கும் என் தெரிவித்தார்.
பின்னர் தாமரை பெண்களுக்கு உதாரணாமாக இருப்பதாக கூறிய சிபி மனைவி இறுதியாக நீங்கள் வெற்றியுடன் வெளியில் வாங்க என தாமரையை பார்த்து கூற பூரித்து போனா தாமரை ஸ்லோகாவின் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.
