அரக்க வம்சம் vs ராஜ வம்சம் டாஸ்க்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட கன்டெண்ட் கிடைத்து. முகத்தில் ஸ்பீரே அடிப்பது, கண்ணில் ஆரஞ்சு பழ தோலை அடிப்பது என அரக்கர்கள் கூட்டம் செய்த அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த டாஸ்கின் போது தான் சுரேஷ் சக்கரவர்த்தி சனத்தின் தலையில் அடித்துவிட, பெரிய பஞ்சாயத்தே உருவானது. கோபப்பட்ட சனம் வாடா, போடா என தரக்குறைவாக வயது வித்தியாசமின்றி சுரேஷை தாளித்தெடுத்தார். 

 

இதையும் படிங்க: என்னா ஸ்டைலு !... முறுக்கு மீசை... முரட்டு தாடியுடன் சிம்பு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்...!

தற்போது அதேபோல் ஒரு டாஸ்கை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அறிவித்துள்ளனர். புதிய மனிதா என்ற பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ரோபோக்கள் தலைவராக அர்ச்சனாவும்,  மனிதர்களின் தலைவராக பாலாஜியும் இருப்பார்கள். மனிதர்கள் டீம் ரோபோக்களிடமிருந்து மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகிய உணர்ச்சிகளில் ஏதாவது இரண்டை வெளிக்கொண்டு வர வேண்டும். 

 

இதையும் படிங்க: “சத்யா” சீரியலில் ஆணாக அட்ராசிட்டி செய்யும் ஆயிஷாவா இது?... கிக்கேற்றும் கிளாமர் லுக் போட்டோஸ்...!

இந்த டாஸ்கில் ரோபோவான அர்ச்சனாவின்  முகத்தில் முட்டையை பூசிக்கொள்ளும் படி ஆரி சொல்கிறார். இன்னும் நன்றாக எடுத்து பூசிக்கொள்ளுங்கள் என ஆரி, சொல்ல அர்ச்சனாவின் கண்கனில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இன்றைய பிக்பாஸ் புரோமோவாக வெளியாகியுள்ள இதை பார்க்கும் போது, கண்டிப்பாக அடிதடி சண்டை நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ...