நடிகர் ஆரி தன்னுடைய பிறந்தநாளை நாளை சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே ஆரிக்கு ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் காண்பித்த கண்ணியமும், புத்திசாலித்தனமும் அனைவரையும் கவர்ந்து. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: ஐ.டி. ரெய்டுக்கு காரணம் இதுதான்... முதன் முறையாக மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா....!

பிக்பாஸ் ஆரி நேற்று தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து சோசியல் மீடியாவில் திரையுலகினர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். காமன் டி.பி., பிறந்தநாள் போஸ்டர்கள் என ட்விட்டரில் விதவிதமாக கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதுமட்டுமின்றி சில இடங்களில் மரம் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற நற்பணிகளிலும் ஆரியின் ரசிகர்கள் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: முட்டி வரையுள்ள கறுப்பு உடையில்... ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து கலக்கும் பிரியா பவானி ஷங்கர்!

நடிகர் ஆரி தன்னுடைய பிறந்தநாளை நாளை சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார். மருத்துவமனை இயக்குநர் எழிலரசியை சந்தித்து இனிப்புகளை வழங்கிய ஆரி, அங்குள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.மேலும் அந்த குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார். பிறந்தநாளில் ஆரி செய்த இந்த செயலை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.