Asianet News TamilAsianet News Tamil

BB5| முதல் நாளே அதிரடி; பிக் பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்த ரம்யா கிருஷ்ணன் ; இப்படி மாட்டிக்கிட்டயே சிபி

BiggBossTamil | கமலுக்கு பதில் இறுதி நாள் எபிசோட்டில் நேற்று கலந்து கொண்ட ரம்யாகிருஷ்ணன் ராஜமாதா ஸ்டைலில் போட்டியாளரை பொரித்தெடுத்து விட்டார். ரம்யா கிருஷ்ணன் படுத்தியபாட்டில் கமலே தேவலாம் என்றாகி விட்டது போட்டியாளர்களுக்கு.

Bigg Boss 5 Week End Episode
Author
Chennai, First Published Nov 28, 2021, 7:14 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.

இதனால் கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. ஆனால் கமல் தன்னுடைய ரோலை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார் எனவே அவரே காணொளி வாயிலாக தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த வார இறுதி எபிசோடை நடிகை ரம்யாகிருஷ்ணன்  தொகுத்து வழங்கினார்.. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது அதிரடி கமெண்டுகளால் போட்டியாளர்களை அலற விட்டு வரும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த வார எபிசோட் செம சூடாகவே இருந்தது.

Bigg Boss 5 Week End Episode

ஏற்கனவே பிக் பாஸ் தெலுங்கு சீசன் 3 இன் முக்கிய தொகுப்பாளரான நாகார்ஜுனா வெளிநாடு சென்றிருந்தபோது வார இறுதி எபிசோட்களை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதன் பொருட்டே பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் ரம்யாகிருஷ்ணனை கமலுக்கு பதில் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Bigg Boss 5 Week End Episode

முதலில் மருத்துவமனையில் இருந்தபடி காணொளி வாயிலாக ரசிகர்கள் மாற்று போட்டியாளர்களை சந்தித்த கமல் கொரோனா குறித்து விழிப்புணர்வு கருத்துக்களையும் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.பின்னர் இந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவ ஒரு தோழி முன் வந்துள்ளார் என கூறி ராமயா கிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து தனது பணியை துவங்கிய ராமயா; முதலில் மிகவும் காமாக போட்டியாளர்களை வர்ணித்து தள்ளினார்.

அக்ஷராவை மெழுகு டால் நீ என்று பாடி வர்ணித்த ரம்யா கிருஷ்ணன் அவருக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். நிரூப்பின் முடி குறித்தும் புகழ்ந்து பேசினார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தாமரை, பிரியங்கா, பாவனி, ஐக்கி என பெண் போட்டியாளர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் குறித்து பேச துவங்கிய ரம்யா கிருஷ்ணன் தனது சுமூக பாவனையை சற்று மாற்ற துவங்கினார். வார்டனாக சிபி எப்படி? என போட்டியாளர்களிடம் கேட்க அவரின் கடுமையான நடவடிக்கை குறித்து தங்களது ஆதங்கத்தை கொட்ட துவங்கினார்கள் சக ஹவுஸ்மேட்.

Bigg Boss 5 Week End Episode

சிபியை வறுத்தெடுக்கும் முன் மொழி பிரச்னையை தொட்ட ரம்யா ,ராஜுவிடம் ஐந்து திருக்குறள்களையும் கூறுமாறு கேட்டார். ராஜு திக்கி திணறி கூறுவதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் உங்களுக்கே திணறுதுல்ல? என அதிரடி அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்து மேலும் உங்களுக்கே திணறும் போது பாஷை தெரியாத ஒருவருக்கு எப்படி தெரியும் என்றும் அக்ஷராவுக்கு ஆதரவாக பேசினார்.

Bigg Boss 5 Week End Episode

மீண்டும் சிபியிடம் சென்ற ரம்யா கிருஷ்ணன், நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டு வறுக்க தொடங்கினார். அப்போது சிபி ; எனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப என்னை எதையும் செய்ய விடவில்லை என கூற, ராஜமாதாவாக மரியா ரம்யா கிருஷ்ணன் தேவி ஸ்டைலில் சேட்டை செய்ய விடவில்லையா அல்லது எதையும் செய்ய விடவில்லையா என கிடுக்குப்பிடி போட்டார். இருந்தும் அசராத சிபி நான் என் வேலையை செய்தேன் என கூறினார். அதோடு பிரியங்காவிடமும் உங்களுக்கு தோன்றியதை நீங்கள் செய்யுங்கள் எனக்கு கொடுக்கப்பட்டதை நான் செய்கிறேன் என்றேன் என ரம்யா கிருஷ்ணனிடம் தெளிவுப்படுத்தினார் சிபி.

ஆனால் சிபியின் பேச்சில் உண்மை இல்லை என்பதை தெளிவு படுத்தும் விதத்தில் நீங்கள் சொன்னதை நாங்கள் பார்க்கவில்லை என சூடான வார்த்தையை எறிந்தார் ரம்யா. மொத்தத்தில் இந்த வாரம் அல்ட்ரா சிட்டி செய்து வந்த வார்டன் சிபியையும், வாத்தியார் ராஜூவையும் பொறித்து தள்ளி விட்டார் ரம்யா கிருஷ்ணன். 

கமல் இல்லாத வாரம் என அஸ்வாசப்பட்ட போட்டியாளர்களுக்கு, கவலையில் இருந்த ரசிகர்களுக்கும் போதுமான சுவாரஸ்யத்தை கொடுத்து விட்டார் ரம்யா கிருஷ்ணன். அவர் படுத்திய பாட்டில் கமலே தேவலாம் என்றாகி விட்டது போட்டியாளர்களுக்கு.

ரம்யாவின் அதிரடி கமெண்டுகள் இன்று நடைபெறவுள்ள எலிமினேஷன் எபிசோட் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios