பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து நேற்று பலரும் எதிர்பார்த்த படியே சுசித்ரா வெளியேற்றப்பட்டார். கடந்த சில தினங்களாக பாலாஜி உடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த சுசித்ரா, தான் இந்த வாரம் நிச்சயம் வெளியில் சென்றுவிடுவேன் என அவரும் சொல்லியிருந்தார். அதை உறுதிபடுத்தும் விதமாக அவர் தான் கடந்த வாரம் வெளியேறினார்.

 

இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்த விஜய் டி.வி. சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!

வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாமினேசன் படலம் தொடங்கியுள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் போட்டியாளர்களை கன்ஃபக்சன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் எவிக்ட் செய்ய விரும்பும் நபர்களை தேர்ந்தெடுக்க கூறுகிறார். அதற்காக  ஆரி உள்ளே செல்லும் போதும், சனம் ஒரு நிமிடத்தில் வந்து விடுவார் என நக்கலாக கூற, நீங்க யாருமே பேசுறதே இல்லையா? இங்க என கோபமாக பேசிவிட்டு, கன்ஃபக்சன் அறைக்கு சென்று நாமினேட் செய்கிறார். 

 

இதையும் படிங்க: வரம்பு மீறும் அனிகா... வயதுக்கு மீறிய கிளாமர் போட்டோஷூட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

இதையடுத்து இந்த நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் செய்யப்படுவதற்கு கூறப்பட்ட காரணங்களை செல்லப்பெயர்களாக அறிவித்த பிக்பாஸ், இந்த வாரம் ’சேஃப் கேம் ஆட்றாங்க’, ’ரூல்ஸ் பிரேக் பண்றாங்க’, ’ராஜா வீட்டு கண்ணுக்குட்டி போல் எந்த வேலையும் செய்யாமல் இருக்காங்க’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, சோம், பாலாஜி, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என பிக்பாஸ் அறிவித்தார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது வார இறுதியில் தான் தெரியும்.