நடிகர் கெளதம் கார்த்தி நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இந்த படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். 

பிக்பாஸ் சீசன் 2 ,நிகழ்ச்சியில் மிக குறைவான வயதுடைய நடிகையாக இவர் கலந்து கொண்டாலும், இவர் மிகவும் மெச்சூரிட்டியுடன் விளையாடியது ரசிகர்களை இவருடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 

ரசிகர்களிடம், அதிக வெறுப்பை சம்பாதித்த ஐஸ்வர்யா தத்தாவை வெளியேற விடாமல் பல முறை காப்பாற்றிய இவர், வெற்றி பெற தகுதி இருந்தும் ஒரு சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார். 

மேலும் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வரும், மஹத்தை தானும் காலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இவர் வெளியே வந்ததும் ஒரு வழியாக இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது தன்னுடை கவனத்தை படங்கள் நடிப்பதில் செலுத்தி வருகிறார்.

மேலும் உடல் எடையை குறைப்பதற்காக தீவிர ஜிம் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, இவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🤸‍♂️ #trainhard

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on May 24, 2019 at 6:45am PDT