பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.  தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று சோகமான விஷயம் என்றும் கூறலாம். 

வெற்றியாளர் யார் என்பதில் பல குழப்பங்கள் நிலவி வந்தாலும், இது வரை மிகவும் எதார்த்தமான பெண்ணாக அனைவராலும் பார்க்கப்படும், நடிகை ரித்விகா தான் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாக்கு எண்ணிக்கையில் கூட ரித்விகா மற்றவர்களை விட அதிக வாக்கு எண்ணிக்கையில் இருந்தார்.

அவர்தான் பிக்பாஸ் 2வது சீசன் டைட்டிலை பெறுவார் என்று மக்கள் நினைத்து வருகின்றனர். தற்போது இந்த பிக்பாஸ் 2வது சீசனின் டைட்டில் வின்னராக ரித்விகாவை தான் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் தேர்வு செய்துள்ளதாக தொலைகாட்சி வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.