தளபதி விஜய் நடித்த 'சந்திரா லேகா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, ஒரு சில படங்கள் நடித்து முடித்ததும், திருமணம் ஆகி செட்டில் ஆனவர் மஞ்சுளா - விஜயகுமார் நட்சத்திர தம்பதிகளின் மகள், வனிதா.

திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளை பெற்ற பின் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதே வருடம்,  ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இரண்டாவது  கணவரிடம் இருந்தும் விவாகரத்து, காதல் சர்ச்சை, மற்றும் குடும்ப பிரச்சனைகளில் சிக்கி தவித்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் விளையாடினார் என்பது நாம் அறிந்தது தான். ஓவராக கத்தியது, மற்றும் வாண்டடாக சென்று மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்தது, இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.

தற்போது ஒரு படத்திலும் ,மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கிங் கோமாளி என்கிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். 

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு தன்னுடைய மகளுடன் பேட்டி கொடுத்த வனிதா, விரைவில் யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அவ்வப்போது தனக்கு மனதில் தோன்றுபவையை எழுதி வைப்பதற்காக தன்னுடைய ஹாண்ட் பேக்கில் எப்போதும், ஒரு டைரி இருக்கும் என தெரிவித்துள்ளார். அதே போல் செல்பி ஸ்டிரைக் ஒன்றையும் வனிதா தன்னுடைய கை பையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.