பிக் பாஸ் வீட்டில் இருந்து, ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்ற படுவார் என்பது இந்த நிகழ்ச்சியின் நீதி. அதன் படி கடந்த வாரம், பிரபல செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து, இரண்டாவது வாரத்தில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் முதல், பலரும் இந்த வாரம் இசை வித்வான் மோகன் வைத்தியா வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறி வருகிறார்கள்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில், அனைவரிடமும் குரலை உயர்த்தி சண்டை  போட்டு வரும், வனிதாவை காப்பாற்ற டாஸ்க் என்கிற பெயரில், பிக்பாஸ் முயற்சி செய்து வருவதாகவும் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

வனிதாவை வெளியேற்றினால் நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதற்காக, வனிதாவை வெளியேற்றாமல் பிக்பாஸ் வீட்டில் இருக்க செய்ய வாய்ப்புகள் உள்ளது. மேலும் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்து வந்த இளம் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்களின் குரலை உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் நாட்களில் சண்டை மேலும் சூடு பிடிக்கும் என்பது உறுதி.