பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தின் முதல் நாள் அன்று எப்போதும் போல் நடைபெறும் நாமினேஷன் படலம் அரங்கேறியது. இந்த முறை அபியை வெளியேற்றலாம்  என எண்ணியவர்கள், அவர் தலைவர் பதவியை கைப்பற்றியதால், அவரை நாமினேட் செய்யமுடியாமல் போனது.

இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களும், யாராவை அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்களது பெயரையும் அதற்கான காரணத்தையும் கூறி நாமினேட் செய்தனர்.

இதில் அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில், பிக்பாஸ் வீட்டில் இருப்பதும், வெளியேறுவதும் தீர்மானிக்கப்படும்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற நாமினேஷனில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள், எலிமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் மதுமிதா, மோகன், சரவணன், வனிதா, மற்றும் மீரா ஆகியோர்.